சித்திரவதைகள், அடிமைச் சேவகம் மற்றும் உழைப்புச் சுரண்டலில் இருந்து விடுதலை எந்த ஒருவரும் சித்திரவதைகளுக்கு ஆளாவதற்கோ அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவாக நடத்தப்படுவதற்கோ, அடிமைச் சேவகம், உழைப்புச் சுரண்டல் அல்லது தண்டனைக்கு உட்டுத்தப்படுவதற்கோ இடமளிக்க கூடாது
அத்தியாயம் 2: அடிப்படை உரிமைகள்
இப்பிரிவு, இலங்கையிலுள்ள அனைத்து ஆட்களுக்கும் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள சிந்தனை, மதம், பேச்சு, நடமாட்டம் ஆகிய சுதந்திரங்கள் மற்றும் சட்டத்தின் முன் சமத்துவம் உள்ளடங்கலான அடிப்படை உரிமைகளை கோடிட்டுக் காட்டுகின்றது. அதேவேளை சித்திரவதை, எதேச்சையான கைது மற்றும் நியாயமற்ற தண்டனைகளிலிருந்து தனிநபர்களைப் பாதுகாப்பதுடன், இவ்வுரிமைகள் ஒரு சனநாயக சமூகத்திற்கு அவசியமான வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு மட்டுமே உட்பட்டவையாகும்.
உறுப்புரை 11: சிந்தனை, மனச்சாட்சி மற்றும் மதச் சுதந்திரம்
ஒவ்வொருவரும் சிந்தனை, மனச்சாட்சி மற்றும் மதச் சுதந்திரத்திற்கு உரித்துடையவராவர்; இதில் ஒருவர் தனது விருப்பத்திற்கேற்ப ஒரு மதத்தையோ அல்லது நம்பிக்கையையோ கொண்டிருப்பதற்கும் அல்லது தழுவிக்கொள்வதற்குமான சுதந்திரமும் அடங்கும்.
உறுப்புரை 12: சித்திரவதைகள், அடிமைத்தனம் மற்றும் சுரண்டலில் இருந்து விடுதலை
எந்தவொரு நபரும் சித்திரவதைகளுக்கோ அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்துகைக்கோ அல்லது தண்டனைக்கோ உட்படுத்தப்படலாகாது. இதில் அடிமைத்தனம், அடிமைச் சேவகம், கட்டாய உழைப்பு, மனிதக் கடத்தல், கொத்தடிமை முறை அல்லது நவீன வடிவங்களில் அமையும் அனைத்து வகையான சுரண்டல்களுக்கும் எதிரான முழுமையான தடையும் அடங்கும்; அத்துடன் இத்தகைய மீறல்களைத் தடுக்கவும், விசாரணை செய்யவும் மற்றும் அவற்றுக்குத் தீர்வு காணவும் அரசு கடமைப்பட்டுள்ளது.
உறுப்புரை 13: சமத்துவத்திற்கான உரிமை
சட்டத்தின் முன்பு ஆட்கள் எல்லோரும் சமமானவர்கள் : அத்துடன் அவர்கள் சட்டத்தினால்சமமாகப் பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையவர்கள்.
இனம், மதம், மொழி. சாதி. பால், அரசியற் கொள்கை அல்லது பிறப்பிடம் காரணமாக அல்லது அத்தகைய காரணங்களுள் எந்த ஒன்று காரணமாகவும் எந்தப் பிரசைக்கும் ஓரங்காட்டுதல் ஆகாது : ஆயின், பகிரங்க சேவையில், நீதித்துறைச் சேவையில் அல்லது உள்ளூராட்சிச் சேவையில், அல்லது ஏதேனும் பகிரங்கக் கூட்டுத்தாபனத்தின் சேவையில் உள்ள ஏதேனும் ஊழியத்திற்கான அல்லது பதவிக்கான கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஏதேனும் மொழியை அறிந்திருத்தல் நியாயமாக அவசியமானதாகவுள்ளவிடத்து, அத்தகைய ஏதேனும் ஊழியத்துக்கான அல்லது பதவிக்கான தகைமையாக அம்மொழியில் போதிய அறிவை நியாயமான காலத்தினுள் பெறுதல் வேண்டுமென ஆளொருவர் தேவைப்படுத்தப்படுவது சட்டமுறையானதாதல் வேண்டும்: ஆயின்.மேலும், அத்தகைய ஊழியத்திற்கான அல்லது பதவிக்கான பணிகளுள் எவற்றையும் ஏதேனும் மொழியை அறிந்திருந்தால் தவிர வேறு விதத்தில் நிறைவேற்ற முடியாமலிருக்குமிடத்து, அத்தகைய ஏதேனும் ஊழியத்துக்கு அல்லது பதவிக்குச் சேர்த்துக்கொள்வதற்கான தகைமையாக அம்மொழியில் போதிய அறிவை உடையவராக இருத்தல் வேண்டுமென| ஆளொருவர் தேவைப்படுத்தப்படுவது சட்டமுறையானதாதல் வேண்டும்.
எந்தஆளும், இனம். மதம், மொழி, சாதி, பால் காரணமாக அல்லது அத்தகைய காரணங்களுள் எந்த ஒன்று காரணமாகவும். கடைகள், பொது உணவுச் சாலைகள், விடுதிகள் பொதுக் களியாட்டவிடங்கள், தனது மதத்துக்குரிய பொ வழிபாட்டிடங்கள என்பவற்றிற்குச் செல்லுதல் தொடர்பில் ஏதேனும் தகுதியீனத்துக்கு, பொறுப்புக்கு, மட்டுப்பாட்டுக்கு அல்லது நிபந்தனைக்கு உட்பட்டவராதலாகாது.
இவ்வுறுப்புரையிலுள்ளதெதுவும், பெண்களின் பிள்ளைகளின் அல்லது இயலாமையுள்ள ஆட்களின் முன்னேற்றத்துக்காக சட்டத்தின் மூலம். துணைநிலைச் சட்டவாக்கத்தின் மூலம் அல்லது ஆட்சித்துறை நடவடிக்கை மூலம்சிறப்பேற்பாடு செய்யப்படுவதைத் தடுத்தலாகாது.
உறுப்புரை 14: தன்னிச்சையான கைது, தடுப்புக்காவல் மற்றும் தண்டனை இவற்றுக்கு எதிரான சுதந்திரமும், பின்னேற்பான குற்றவியல் சட்டவாக்கத்தின் மீதான தடையும்
சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடவடிக்கை முறைக்கிணங்கவன்றி, ஆளெவரும்கைது செய்யப்படுதலாகாது. கைது செய்யப்படுவதற்கான காரணம் கைது செய்யப்படும் எவரேனும் ஆளுக்கு அறிவிக்கப்படுதல் வேண்டும்.
கட்டுக்காவலில் வைத்திருக்கப்படும், தடுத்துவைத்திருக்கப்படும், அல்லது வேறுவகையில் சொந்தச் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கும் ஒவ்வோராளும்சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடவடிக்கை முறைக்கிணங்க மிக்க அண்மையிலுள்ள தகுதிவாய்ந்த நீதிமன்றத்தின் நீதிபதி முன்னர் கொணரப்படுதல் வேண்டும் என்பதுடன், சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடவடிக்கை முறைக்கிணங்க அத்தகைய நீதிபதியினால் ஆக்கப்படும். கட்டளைப்படியன்றியும் அதன் நியதிகளுக்கிணங்கவன்றியும், தொடர்ந்தும் கட்டுக்காவலில் வைத்திருக்கப்படுதலோ, தடுத்துவைக்கப்படுதலோ அல்லது சொந்தச் சுதந்திரம் பறிக்கப்படுதலோ ஆகாது :
தவறொன்றுக்குக் குற்றஞ்சாட்டப்படும் எவரேனுமாள், தகுதி) வாய்ந்த நீதிமன்றமொன்றினால் நடாத்தப்படும் நியாயமான விளக்கத்தில் அவரே நேரடியாக உரைப்பதற்கு அல்லது சட்டத்தரணிமூலம் உரைப்பதற்கு உரித்துடையவராதல் வேண்டும்
சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடவடிக்கைமுறைக்கு இணங்கத் தகுதிவாய்ந்த நீதிமன்றத்தினால் ஆக்கப்படும் கட்டளையின் மூலமாகவன்றி, ஆள் எவரும் மரணதண்டனையினால் அல்லது மறியற்றண்டனையினால் தண்டிக்கப்படுதலாகாது. புலனாய்வு அல்லது விளக்கம் முடிவுறும்வரையில் ஆளொருவரைக் கைது செய்து வைத்திருத்தல், கட்டுக்காவலில் வைத்திருத்தல், தடுத்து வைத்திருத்தல் அல்லது அவரது சொந்தச் சுதந்திரத்தை வேறுவகையில் பறித்தல் தண்டனையாக அமையலாகாது.
ஆளொவ்வொருவரும், அவர் குற்றவாளியென எண்பிக்கப்படும் வரை,சுத்தவாளியென ஊகிக்கப்படுதல்வேண்டும்: ஆயின், குறிப்பிட்ட நிகழ்வுகளை எண்பிப்பதற்கா
புரியப்பட்ட நேரத்தில் தவறொன்றாகவிருந்திராத ஏதேனும் செயல் அல்லது செய்யாமை காரணமாக. ஆளெவரும் தவறொன்றுக்குக் குற்றவாளியாதலாகாது என்பதுடன், அத்தவறு புரியப்பட்ட நேரத்தில் வலுவிலிருந்த தண்டத்திலும்பார்க்கக் கடுமையான தண்டமெதுவும் அத்தகைய ஏதேனும் தவறுக்கு விதிக்கப்படுதலுமாகாது. தேசங்கள் என்ற சமுதாயத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தின் பொதுவான நெறிகளுக்கிணங்க எச்செயல் அல்லது செய்யாமை, அதுபுரியப்பட்ட நேரத்தின்போது குற்றவியலானதாக இருந்திருக்குமோ அச்செயலுக்காக அல்லது செய்யாமைக்காக எவரேனும் ஆளை விளங்கு தலையும் அவருக்குத் தண்டனையளித்தலையும் இவ்வுறுப்புரையிலுள்ள எதுவும் பங்கப்படுத்துதலாகாது. தவறொன்றுக்கு ஆகக்குறைந்த தண்டமொன்றை விதிக்கும்படி தேவைப்படுத்துதல், அத்தகைய தவறு புரியப்பட்ட நேரத்தில் அத்தகைய தவறுக்கென விதிக்கப்பட்ட ஆகக்கூடிய தண்டத்தை அத்தகைய தண்டம்| விஞ்சுவதாயில்லாதிருப்பின், இவ்வுறுப்புரையின் மீறுகையாக இருத்தலாகாது.
குடிவருவோர், குடியகல்வோர் சட்டத்தின் அல்லது 1967 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, இந்திய - இலங்கை உடன்படிக்கை (செயற்படுத்தல்) சட்டத்தின் அல்லது அவற்றிற்குப் பதிலாக வைக்கப்படக்கூடியவாறான அத்தகைய வேறு சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் ஆக்கப்பட்ட அகற்றற் கட்டளையின் காரணமாக. அல்லது துறைகடத்தும் கட்டளையின் காரணமாக ஆளொருவரைக் கைது செய்தல், கட்டுக்காவலில் வைத்திருத்தல், தடுத்துவைத்திருத்தல் அல்லது அவரின் சொந்தச் சுதந்திரத்தை வேறுவகையில் பறித்தல் இவ்வுறுப்புரையை மீறுவதாக அமையாது.
உறுப்புரை 15: பேச்சுசுதந்திரம், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம், முயற்சி செய்வதற்கான சுதந்திரம். தடையின்றி நடமாடுவதற்கான சுதந்திரம் முதலியன.
ஒவ்வொரு பிரசையும் பின்வருவனவற்றுக்கு உரித்துடையவராவர் :-
(அ) வெளியிடுதலுட்படப் பேச்சுச் சுதந்திரமும் கருத்துத் தெரிவித்தற் சுதந்திரமும்
(ஆ) அமைதியான முறையிலே ஒன்று கூடுவதற்கான சுதந்திரம்;
(இ) ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம்;
(ஈ) தொழிற் சங்கமொன்றை அமைக்கவும் அதிற் சேரவும் உள்ள சுதந்திரம்;
(உ) தனியாக அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து, பகிரங்கமாகவேனும் அந்தரங்கமாகவேனும் தனது மதத்தையோ அல்லது நம்பிக்கை யையோ வப்பாட்டிலும். அனுசரிப்பிலும் சாதனையிலும். போதனையிலும் வெளிக்காட்டுவதற்கான சுதந்திரம்:
(ஊ ) தனியாக அல்லது ஏனையவர்களுடன் சேர்ந்து தனது சொந்தக் கலாசாரத்தை அனுபவிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும், அத்துடன் தனது சொந்த மொழியைப் பயன்படுத்துவதற்கும் ஆன சுதந்திரம் ;
(எ ) ஏதேனும் சட்டமுறையான முயற்சியில், உயர்தொழிலில் வியாபாரத்தில், தொழிலில் அல்லது தொழில்முயற்சியில் தானாக அல்லது ஏனையவர்களுடன் சேர்ந்து ஈடுபடுவதற்கான சுதந்திரம்;
(ஏ) இலங்கைமுழுவதும் தடையின்றி நடமாடுவதற்கும். தான் விரும்பும் இடத்தில் வசிப்பதற்கும் ஆன சுதந்திரம் ; அத்துடன்
(ஐ) இலங்கைக்குத் திரும்பிவருவதற்கான சுதந்திரம்.
உறுப்புரை 16: தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமை
ஒவ்வொரு பிரசையும், பிரசையொருவரின் உரிமைகளைப் பிரயோகிப்பதற்கு அல்லது பாதுகாப்பதற்கு தேவைப்படுத்தப்படுவதும் பின்வருபவர்களினால் வைத்திருக் கப்படுவதுமான தகவலாகவுள்ளதுமான ஏதேனும் தகவலை, சட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டவாறாக பெற அணுகுவதற்கான உரிமையைக்கொண்டிருத்தல் வேண்டும் :-
(அ) அரசினால், அமைச்சினால் அல்லது ஏதேனும் அரசாங்கத் திணைக்களத்தினால் அல்லது ஏதேனும் சட்டத்தினால் அல்லது சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட ஏதேனும் நியதிச்சட்டக்குழு;
(ஆ) மாகாணமொன்றின் அமைச்சர்கள் சபையின் அமைச்சர் ஒருவரது ஏதேனும் அமைச்சு அல்லது ஏதேனும் திணைக்களம் அல்லது மாகாண சபையொன்றின் நியதிச்சட்டத்தினால் தாபிக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட ஏதேனும் நியதிச் சட்டக்குழு;
(இ) ஏதேனும் உள்ளூரதிகாரசபை; அத்துடன்
(ஈ) இப்பந்தியின் (அ), (ஆ) அல்லது (இ) என்னும் உட்பந்தியில் குறிப்பீடு செய்யப்படும் நிறுவனமொன்று தொடர்பில் அத்தகைய ஏதேனும் தகவலை உடைமை யில் வைத்திருக்கின்ற வேறு எவரேனும் ஆள்.
ஒழுங்கின்மையை அல்லது குற்றத்தினைத் தடுப்பதற்காக, ஆரோக்கியம் மற்றும் ஒழுக்கங்களைப் பாதுகாப்பதற்காக, மற்றவர்களின் நற்கீர்த்தியை அல்லது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அல்லது அந்தரங்க தன்மையினைப் பாதுகாப்பதற்காக, நீதிமன்ற அவதூறைத் தடுப்பதற்காக அல்லது பாராளுமன்ற சிறப்புரிமையை பாதுகாப்பதற்காக, நம்பகத்தன்மையில் தெரிவிக்கப்பட்ட தகவலின் வெளிப்படுத்துகையைத் தடுப்பதற்காக அல்லது நீதித்துறையின் அதிகாரத்தையும்பக்கச்சார்பற்ற தன்மையையும் பேணுவதற்காக மற்றும் தேசிய பாதுகாப்பு, ஆள்புல ஒருமைப்பாடு அல்லது பொதுமக்கள் பாதுகாப்பு நலன்கருதி சனநாயக சமூகமொன்றில் அவசியமாகக் கூடியவாறாக சட்டத்தினால்விதித் துரைக்கப்படும் அத்தகைய மட்டுப்பாடுகள் தவிர்ந்த மட்டுப்பாடுகள் எதுவும், இவ்வுறுப்புரையினால் பிரகடனம் செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படும் உரிமை மீது இடப்படுதல் ஆகாது.
இவ்உறுப்புரையில் “பிரசை” என்பது கூட்டிணைக்கப் பட்ட குழு ஒன்றை அல்லது கூட்டிணைக்கப்படாத குழுவொ றை அத்தகைய குழுவின் நானகில் மூன்று உறுப்பினர்களுக்குக் குறையாத உறுப்பினர்கள் பிரசைகளாக இருப்பின் அதையும் உள்ளடக்குகின்றது.
உறுப்புரை 17: தனிக்காப்புக்கான உரிமை
ஒவ்வொருவருக்கும் தனிக்காப்புக்கான (privacy) உரிமை உள்ளது என்பதுடன், அதில் கடிதப் போக்குவரத்து, செய்திகள் மற்றும் தொலைத்தொடர்புகள் மீறப்படாதிருப்பதற்கான உரிமையும் அடங்கும். இந்த உரிமையானது அனைத்து வகையான தொடர்பாடல்களையும் தழுவியது என்பதுடன், தனிநபர்கள் எவ்வித தடையுமின்றி சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் தொடர்பாடல் செய்ய முடியும் என்பதை உறுதி செய்கிறது.
உறுப்புரை 18: அரசியலில் முனைப்பாக பங்கேற்பதற்கான உரிமை
அ. ஒவ்வொரு குடிமகனும் பலவந்தமாகவன்றியும் அல்லது தேவையற்ற எந்தவொரு அழுத்தமும் இல்லாமலும் தனது அரசியல் நம்பிக்கைகள் மற்றும் அவற்றோடு இணைந்தவைகளை சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றிருக்க வேண்டும். இந்த உரிமையில் அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமும் அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்கும் சுதந்திரமும் அடங்கும்.
ஆ. ஒவ்வொரு குடிமகனுக்கும் அவ்வப்போது நடத்தப்படும் சுதந்திரமான மற்றும் சுயாதீனமான தேர்தல்களில் வாக்களிக்கவும், பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும், பொதுமக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களைத் தீர்மானிக்கவும் உரிமை உண்டு. வெளிப்படைத்தன்மை, நியாயம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கியிருப்பதை உறுதிசெய்யும் வகையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.
Have feedback on this chapter?
Your insights help shape a stronger constitution. Propose amendments, suggest improvements, or join the discussion.
Sign In to Contribute